Thursday, October 14, 2010

INNANIL ILLAAL

தொட்டிலிலே
துயிலும்
இரண்டாவது
அலைவரிசையின்
ஒலிபரப்பு.

புத்தக குவியலின் பின் நின்று
ஐயம்  கேட்கும்
முதல் குறும்பின்
துடிப்பு

" அவசரமாய் வந்து போ " க
அவரின் அழைப்பு.!
பால்காரர் , காய்காரர்
என
பத்து நொடிக்கொரு தரம்
வாசல் நோக்கி
பரிதவிப்பு.

அலுவலக தொலைபேசி
அது  மாற்றி
அலைப்பேசி
அழைப்புகளில்
ஓயாத
பரபரப்பு.


இத்தனைக்கும்
ஈடு தந்து
புலன்கள் இயங்கும்
இலகும் காலை வேளை.

இடை இடையே
கிடைக்கும்
நொடித் துகள்களில்.
உள்ளுணர்வில்
புதிதாய் புதியதாய்
கவிதை பெருகும்
- மரியா சிவா

No comments:

Post a Comment