புத்தாண்டு ,
பிறந்த நாள்
நாள் எதுவாயினும்
என் பரிசு புத்தகம் ..!!
வயதிற்கும் வகுப்பிற்கும் ஏற்றதாய் ....
வாழ்க்கையை கற்று தர
இல்லம் நிறைக்கும் வண்ண மலர் களஞ்சியம் .!
கணினி வீட்டில் நுழைந்த நாள் முதல்
தன் புன்னகையை மறந்தன
என் வீட்டுப் புத்தககங்கள் !!
மகன் கேட்டான் :
" யாரும் படிப்பதில்லை ...
பின் எதற்கு செலவு "
" உன் மகன் படிக்க கூடும் " என்றேன்.
எல்லா பிள்ளைகளுக்கும்....
உலக புத்தக தின வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment