உதடு பிரியா புன்னகை உடைந்தாலும் , சரிந்தாலும் ஊமை அழுகை ..!“ யார் , என்ன நினைப்பார் ?”
எப்போதும் மனம் குடையும் ஐயம் ..!
இப்போது
மனம் விட்டு சிரிப்பு
வாய் விட்டு அழுகை ..!
நெகிழ்தலும் ,
மகிழ்தலும்
விரிந்து வளையும்
புதிய மனம்..
உயரே உயரே
பறந்துச் செல்லும்
புதிய நான் .!
# முகநூல் உபயம் ..!
No comments:
Post a Comment