Sunday, June 8, 2014

நம் வாழ்வு அழகானது "

எட்டு மணிக்கே
" களைத்திருக்கிறேன் ..." என்கிறேன்

" இப்போதே உறங்கிடு " என
எடுத்துத் வருகிறாய்
போர்வையை. ...

அழுத்தம் சூழ்ந்த
என் மௌனத்தை
அழகெனவே
சகித்துக் கொள்கிறாய் .

அர்த்தமற்ற சீற்றத்துடன்
நான் கீறுகையில்
அணைக்கும் பார்வையால்
அமைதி செய்கிறாய்

சுகமாய் எனைச்
சுமந்து செல்கிறாய்
வயதின் வலிகளை
மறைத்தபடி.

இணைந்தே செல்லலாம் வா
அன்பின் வெளியில் ...!
"
நம் வாழ்வு அழகானது "
என கூவிக் கொண்டே ..!
 — 

1 comment:

  1. வாழ்க்கை அழ்கானது என
    அழ்காகக்கூவும் கவிதையும் அழகானது..பாராட்டுக்கள்.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_22.html

    ReplyDelete