இளங்காலை பயணங்கள் :
நடுநிசியை நனைத்த மழை
தீர்ந்து விட
விடிய துவங்கும்
இளங்காலை..!
“ எங்கு செல்கிறோம் .. கோவிலுக்கா ?”இவர்
“
நகர்வலம் .. “ என்கிறேன் நான் .
சிலுசிலுக்கும் குளிர்காற்று
முகம் மறைக்க
இருசக்கர வாகனத்தில் நாங்கள் ..
ஈரக் கூந்தல் சொட்ட சொட்ட ..
தோள் பற்றி ...
ஆற்றுப் பாலம் கடக்கையில்
விலகும் இருளில்
ஒளிரத் துவங்கும் கதிர்..
எழிற்கோலம் எழுதும்
இனிய வானம் ..
தாரைகள் தரையிறங்க
மிச்சம் கவிழும்
மழைப் பருகி விரைகிறோம்
நாங்கள் ..
# நினைவுகள் தொடர்கதை ..!
No comments:
Post a Comment