இந்த தாலாட்டு என் குழந்தைகளுக்காக நான் எழுதி பாடியது.
25 ஆண்டுகளுக்கு பின்
என் தங்கை மகள்
அவள் மழலைக்கு இதைப்
பாடுவதை கேட்ட போது உளம் மலர்ந்தேன் .
தாய்கள் தான் மாறுகிறார்
- தாய்மை மாறுவதில்லை
தாலாட்டு மறைவதில்லை
என்பது நிஜம் தான்.!
இதோ அந்த தாலாட்டு
---------------------------------------------------------------------------------------------
தூங்கு கண்மணி வைர பொன்மணி
நீ தூங்கு
அன்பு கண்மணி
ஆசை வடிவு நீ !
எங்கள் செல்வம் நீ!
நீ தூங்கு
பஞ்சு மெத்தையிலே
படுத்தால் வலிக்காதோ - எந்தன்
நெஞ்சினிலே நீ தூங்கு
இந்த நாடுமே இன்ப மொழியுமே
உன்னால் நலம் பெறுமே
நீ தூங்கு
- மரியா சிவா , வேலூர்
No comments:
Post a Comment