Tuesday, September 27, 2011

en magale, sinthanai '91

இங்கே
அறிவியலும், தொழிலும்
அன்றாடம் வளர்க்கப்படும்
ஆனால்,
அனைவர்க்கும் உணவில்லை

பற்பல தொழில்நுட்பம்
பேசப்படும்
ஆனாலும்
படித்தவர்க்கோ வேலையில்லை.

நீதியும், நேர்மையும்
மேடையில் முழங்கப்படும்
ஆனாலும்
ஊழலை, பொய்மையை
ஒழித்திட துணிவில்லை.

அண்டைநாட்டு கலவரங்கள்
இங்கே அலசப்படும்
ஆனாலும்,
நம்நாட்டில் இனக்கலவரங்களை,
சாதிகளை எதிர்த்து அழிக்க இயலவில்லை.

இருந்தாலும்
என் மகளே,
இந்தியாவை நேசிக்க
கற்றுக்கொள்.

இலக்கியத்துடன் நான்
நிறுத்தியதை,
நீ
எழுச்சி பெற்று
இலட்சியமாக்கு!



No comments:

Post a Comment