விழிகள் இரண்டும் ...அப்பா ..!
நெளியும் சிரிப்பு அம்மா..!
வளையாத நேர்க்கோடு முடி அம்மாவின் அம்மா..!
விரல்களின் நீளம்.. அம்மாவின் அப்பா ..!!
முகவாய் கொஞ்சம்... அப்பாவின் அம்மா ..!
மென்கன்னங்கள் அப்பாவின் அப்பாவின் அம்மா .!
யோசிக்கும் தோரணை அப்பாவின் அப்பா..
நாசி சொல்லும் ...அம்மாவின் அப்பாவின் அம்மா..!!
குட்டிப் பாப்பா யார் போல் இருக்கா ?
ஒற்றைவரி கேள்விக்கு எட்டுவித பதில் ...
எனக்கென்னவோ
பாப்பா பாப்பா போல்தான் இருக்கா ..!!
No comments:
Post a Comment