மண் சொப்புகளும் ..மரப்பாச்சியும் ..!
எப்போதும் விளையாட வேண்டும் ..
அலைபேசி , மடிக்கணினி , வீடியோ
மாற்றி மாற்றி ...
காரோட்டி,
உண்டி வில்லில் பறவை வீழ்த்தி
வெட்டி, சுட்டு, குத்தி
எதிலாவது விளையாட வேண்டும் ..
அவளுக்கு ...
என் தங்கை மகள் ..!
எந்நேரமும் இவைதானா ?
சலித்தவாறே ?”
தேடித் தேடி வாங்கி தந்தேன்
மண் சொப்புகள் !
விநோதமாய் பார்த்தாள்..
“இவை வைத்து என்ன செய்ய ?
இரண்டு மண் சொப்பும்
ஒரு மரப்பாச்சியும் போதுமே
மழலை உலகை
மலர்விக்க..!
மண் வீடு கட்டி
கூட்டாஞ் சோறு சமைத்து
பொம்மை கல்யாணம் செய்து
அது ஒரு தனி உலகு ..!
எழிலழகு
கூழாங்கல்லும்,
புளியங்கொட்டையும்
வைரக்
குவியலான
குழந்தை ராஜ்ஜியம் ..
கண் விரிய நான் சொன்ன
கதைகள் கேட்டபின்
கேட்டாள்:
“ உங்க “டேப் “ இல் சார்ஜே இல்லையா
டெம்பிள் ரன் ஆடனும் ..
No comments:
Post a Comment