சிலு சிலு காலையில் சுகமான நடை கணவருடன் .
பாதி ,பேச்சு மீதி சிந்தனை !!
பிடித்தப் பாடல்கள் பின்னணியில் சமையல்.
அழுத்தமில்லா நாளாய் அமைந்தது விட்டது இன்று.!!
தகிக்கும் வெயிலில்
ஆய்வு முடித்து அலுவலகம்
திரும்புகையில்
அலைபேசி அழைக்க "இவர்"
"சாப்டாச்சா? "
"இன்னும் இல்லை .
வெளியே சென்று திரும்புகிறேன் " நான்
" சீக்கிரம் , இன்னிக்கு சாப்பாடு சூப்பர் "
அலுவலகம் வந்து சாப்பிட்டு பார்த்தேன்.
வழக்கம் போல சுமார்தான்.!!!!!
ஆண்டாண்டாய் தொடரும்
அழகான பொய்களால் ஆன வாழ்க்கை ...
இந்த நாள் இனிய நாள்...!!!!
No comments:
Post a Comment